மனித மலத்தை மனிதன் அள்ளுவதை நியாயப்படுத்தும் மோடி: திருமா கடும் கண்டனம்
சென்னை: மனித மலம் அள்ளும் பணியில் ஈடுபடுவது புனிதமானது என்றும் அத்தகைய பணிகளில் ஈடுபடுவோர் யோக நிலையை' அடைவார்கள் என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது நூலில் குறிப்பிட்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருமா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மனுநீதி மற்றும் மதவெறியை வலியுறுத்தி 'கர்மயோக்' என்கிற பெயரில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அந்த நூலை அரசு செலவிலேயே குஜராத் அரசு வெளியிட்டுள்ளது.
அந்நூலில் மலம் அள்ளுவது, சாக்கடைகளையும் குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடுவது புனிதமானது என்றும் அத்தகைய பணிகளில் ஈடுபடுவோர் யோக நிலையை' அடைவார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விஞ்ஞான யுகத்தில் அனைத்து தளங்களிலும் புதிய உயரிய தொழிற் நுட்பங்கள் கையாளப்படுகின்றன. ஆனால் நம்நாட்டில் மட்டும்தான் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நீடிக்கிறது.
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி மனுநீதி கருத்துக்களை உயர்த்தி பிடிப்பதுடன், வெளிப்படையாக ஒரு ஆர்.எஸ்.எஸ்காரராகவே செயல்பட்டு வருகிறார்.
மலம் அள்ளுவது புனிதமானது' என்ற அத்தொழிலில் ஈடுபடுவோர் யோக நிலையை அடைவார்கள் என்றால் நரேந்திர மோடியும், அவரது கும்பலும் மனித மலத்தை அள்ளி யோகிகள் மாறலாமே!
மலம் அள்ளும் இழி தொழிலை நியாயப்படுத்தியுள்ள நரேந்திர மோடி தனது கருத்தை திரும்ப பெறுவதுடன் வால்மீகி உள்ளிட்ட தலித் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தை வலியுறுத்துகிறது. இல்லையேல் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் என கூறியுள்ளார்.
தமிழர்களை பாதுகாக்க செயல் திட்டம்:
மலேசியாவில் வாழும் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை மெமோரியல் ஹால் விடுதலைச் சிறுத்தைகள் சார்ிபல் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் திருமா பேசுகையில்,
மலேசியாவில் நடைபெற்ற தமிழர்களின் பேரணியில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் இன வெறியாட்டத்தை கட்டவிழ்த்துள்ளது அந்த நாட்டு அரசு. இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போய் விட்டனர்.
மலேசிய அரசின் இந்த போக்கு கண்டிக்கத்தக்கதாகும். இந்த பிரச்சனையில் இந்திய அரசு தலையிட்டு மலேசியாவில் வசிக்கும் தமிழர்களை பாதுகாக்க வேண்டும்.
மலேசியாவை போலவே சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் தமிழர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். இது தெரிந்ததும் இந்திய அரசு மெளனம் காட்டுவது வேதனையளிக்கிறது. போலி விசா போன்ற வேறு காரணங்களால் ஏராளமான தமிழர்கள் வெளிநாடுகளில் சிறையில் அடைக்கப்பட்டு கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.
எனவே சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு தனி செயல்திட்டத்தை வகுத்திட வேண்டும்.
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக, பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது என்று காவல்துறை அறிவித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு தார்மீக ஆதரவு அளிப்பது பற்றி எந்தவித எச்சரிக்கையும் விட்டதாக நாங்கள் கருதவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.
ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பதில் தவறு கிடையாது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தான் ஆதரவு கொடுக்கக் கூடாது. ஈழத்தமிழர்களை தார்மீக முறையில் ஆதரித்து கொண்டிருக்கிறோம் என்றார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications