'மலேசியத் தமிழர்கள் மீதான தாக்குதல் மிருகத்தனமானது'
ஷாஜாபூர் (ம.பி): மலேசியத் தமிழர்கள் மீதான தாக்குதல் மிருகத்தனமான, மனித உரிமையை மீறும் செயல் என காங்கிரஸ் தலைவரும், மத்தியப் பிரதேச மாநில சிறுபான்மையினர் ஆணைய முன்னாள் தலைவருமான இப்ராகிம் குரேஷி கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மலேசியாவில் அமைதியான முறையில் கூடிய இந்து சிறுபான்மையினர் மீது அந்நாட்டு போலீஸார் மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். இது கடுமையாக கண்டித்தக்கது, கவலை அளிக்கும் விஷயமாகும்.
மலேசியாவில் அரசு வேலைகளில் இந்துக்கள் அமர்த்தப்படுவதில்லை. இந்து கோவில்கள் வளர்ச்சி என்ற பெயரில் இடித்துத் தள்ளப்படுகின்றன.
இது மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான, மக்கள் விரோத, பாரபட்சமான நடவடிக்கையாகும்.
மலேசியாவின் சுதந்திரத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும், இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கும் மலேசிய இந்துக்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். உலக சமுதாயத்தினருக்கு மலேசிய இந்துக்களும், முஸ்லீம்களும் பெரும் உதாரணமாக விளங்கிக் கொண்டுள்ளனர்.
ராமாயணக் கதைகளை இரு சமுதாயத்தினரும் அங்கு பல ஆண்டுகளாக நாடகங்கள் மூலம் நடத்திக் காட்டி இரு சமுதாயத்தினரின் ஒற்றுமையை உலக சமுதாயத்திற்குப் பறை சாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் மலேசிய அரசு பாரபட்சமான போக்கைக் கடைப்பிடிப்பது வருத்தம் தருகிறது. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications