புதுவையில் குண்டுவெடிப்பு: சிறுவன் பலி
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று இரண்டு பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். மற்றொரு சம்பவத்தில் அதிமுக பிரமுகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
புதுச்சேரி, வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கணேஷ். அதிமுக பிரமுகரான இவருக்கும், பிரான்ஸ் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு கணேஷும், அவரது குடும்பத்தினரும் வீட்டின் முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் ஒரு நாட்டு வெடிகுண்டு வீட்டுக்குள் வந்து விழுந்து வெடித்தது.
இதில் அறையின் ஜன்னல் கதவுகள் சிதறின. குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் விரைந்து வந்தனர். வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்து கிடந்ததைப் பார்த்தனர்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் சென்றது. போலீஸார் விரைந்து நடவடிக்கையில் இறங்கி ராஜ்குமாரைக் கைது செய்தனர். மற்றவர்களைப் பிடிக்க தீவிர வேட்டை நடந்து வருகிறது.
சிறுவன் பலி:
அதே வண்ணாரப்பேட்டை பகுதியில், இன்று பிற்பகலில் இன்னொரு குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இன்று பிற்பகுதியில், இந்திய உணவுக் கழக கிட்டங்கி உள்ள பகுதியில் விஜய் என்ற சிறுவனும் அவனுடைய நண்பர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ரயில் பாதையை ஒட்டிய இடத்தில் ஒரு பாலிதீன் பை கிடந்ததைப் பார்த்த சிறுவர்கள், அந்த பையை எடுத்தனர். அதை விஜய் திறக்க முயன்றான். அப்போது அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் விஜய் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தான். அவனுடைய நண்பர்கள் விக்கி, தமிழ்செல்வன், சூசை ராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த மூன்று பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களால் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீசிய நபர்கள் போட்டுச் சென்ற குண்டுகளில் ஒன்றுதான் வெடித்து விஜய் இறந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் ரங்கசாமி, அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவர்களைப் பார்த்து உடல் நலம் விசாரித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications