பிரபல திருட்டுத் தம்பதி கைது!
திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் பல்வேறு திருட்டுக்களில் தொடர்புடைய, நீண்ட காலமாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த திருட்டுத் தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தத் திருட்டு கணவன், மனைவிக்கு 28 வழக்குகளில் தொடர்பு இருக்கிறதாம்.
நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நெல்லை சரக டிஐஜி பி.கண்ணப்பன் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள் பெயர் முருகேசன் (48), ஜேசுமணி (36). இருவரும் கணவன், மனைவி ஆவர்.
இருவருக்கும் தொழிலே திருட்டுதான். இருவரும் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் போய் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்குவர்.
பின்பு அங்குள்ள பெண்களிடம் நெருக்கமாக பழி அவர்கள் வீடுகளில் தனியாக இருக்கும்போது குளிர்பானங்களில் மயக்க மருந்துகளைக் கலந்து கொடுத்து விட்டு, நகை, பணத்தைத் திருடிச் சென்று விடுவர்.
இதுவரை நெல்லையில் மட்டும் 21 வழக்குகளில் 63 பவுன் தங்க நகைகளை இவர்கள் திருடியுள்ளனர். கன்னியாகுமரியில் 5 வழக்குகளில் 20 பவுன் நகைகளையும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளில் 8 பவுன் நகைகளையும் இவர்கள் திருடியுள்ளனர் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications