ஆசிரியரை கன்னத்தில் அறைந்த மாணவன் டிஸ்மிஸ்
சென்னை: ஆசிரியரை கன்னத்தில் அறைந்த மாணவனை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது.
சென்னையை அடுத்துள்ள மணலியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியொன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளிக்கு சென்ற இவர் நேற்று வகுப்பறையில் பாடத்தை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். இதைப் பார்த்த வகுப்பாசிரியர் மரியசூசை மாணவன் வினோத்குமாரை கடுமையாக கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார் தன்னை கண்டித்த ஆசிரியரை வகுப்பறையில் வைத்து கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார்.
இதை மரியசூசை உட்பட சக மாணவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. விஷயம் தெரிந்தவுடன் அனைத்து ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர் தனபாலிடம் புகார் செய்தனர். இதனால் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாகலிங்கம் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து மாணவன் வினோத்குமாரை டிஸ்மிஸ் செய்ய முடிவெடுத்தனர்.
பின்னர் வினோத்குமாரின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் நடந்த சம்பவத்தை சொல்லி தலைமை ஆசிரியர் டி.சியை கொடுத்தார். பின்னர் மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முழு ஆண்டு தேர்வை மட்டும் எழுத தலைமை ஆசிரியர் அனுமதித்தார்.
ஆசிரியரை மாணவன் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications