பெங்களூரில் இறங்கிய சென்னை விமானத்தில் தீ
பெங்களூர்: பெங்களூருக்குச் சென்ற சென்னை சரக்கு விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக அபுதாபிக்குச் செல்லும் சரக்கு விமானம் நேற்று இரவு பெங்களூர் வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்ட அந்த விமானம் 8.20 மணியளவில் அபுதாபி கிளம்பியது.
ரன்வேயில் விமானம் ஓடியபோது திடீரென என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து விமானி, வேகமாக விமானத்தை நிறுத்தி விட்டார். விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் பறந்தது.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். துரிதமாக தீயணைப்புப் படையினர் செயல்பட்டதால் தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது. சற்று தாமதித்திருந்தாலும் கூட பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
விமானி பத்திரமாக தரையிறக்கப்பட்டார். வேறு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. வேறு விமானங்களும் கிளம்பவில்லை.
சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த 25 பயணிகள் விமானங்கள் அந்தந்த ஊர்களுக்கே திருப்பி விடப்பட்டன. இதனால் சுமார் 1 மணி நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications