நடராஜனுடன் தொடர்பு: 10 அதிமுகவினர் நீக்கம்
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக 10 அதிமுகவினரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் கணவர் நடராஜனை ஜெயலலிதா ஒதுக்கி வைத்துள்ளார். அவருடன் அதிமுகவினர் தொடர்பு ஏதும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இருந்தாலும் அதிமுகவினர் பலர் தொடர்ந்து நடராஜனுடன் நல்ல தொடர்பில்தான் இருந்து வருகின்றனர். அவர்களை அவ்வப்போது கட்சியிலிருந்து நீக்கி வருகிறார் ஜெயலலிதா.
இந்த நிலையில், திருச்சி, கரூர் மாவட்டங்களில் நடராஜன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த விழாக்களில் திரளான அதிமுகவினரும் பங்கு கொண்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா திருச்சி மாவட்ட அதிமுக இணைச் செயலாளர் நசீரா பேகம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட பெண்கள் அணி பொருளாளர் நிர்மலா உள்ளிட்ட 10 பேரின் பதவிகளையும், கட்சி உறுப்பினர் பதவியையும் பறித்துள்ளார்.
இவர்களுடன் அதிமுக தொண்டர்கள் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதேபோல கரூர் மாவட்டத்தில் நடராஜன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவினரின் பதவிகளுக்கும் ஆப்பு வைக்கப்படும் என்று கரூர் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பீதி நிலவுகிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்











Click it and Unblock the Notifications