போலி பாஸ்போர்ட்: 7 இலங்கைத் தமிழர்கள் கைது
சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணை என்ற இடத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபட்ட 7 இலங்கைத் தமிழர்கள் உள்பட 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சங்கராபுரம் என்ற இடத்தில் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் நடத்திய சோதனையின்போது ஏராளமான போலி பாஸ்போர்ட்டுகள் சிக்கின.
இதுதவிர வங்கி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், இமிக்ரேஷன் அதிகாரிகள் உள்ளிட்டோரின் போலி ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்டவையும் சிக்கின. இதைப் பார்த்து அதிர்ந்த அதிகாரிகள் அங்கு தங்கியிருந்தவர்களிடம் விசாரித்தபோது போலி பாஸ்போர்ட், விசா தயாரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து செந்தில்நாதன் (32), சிவக்குமார் (29), மகேஸ்வரன் (32), ராஜேந்திரன் (21), மனோரமணன் (30), கஜேந்திரன் (29), சுரேஷ்குமார் (30), ராமமூர்த்தி (25) ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து கம்ப்யூட்டர், ஸ்கேனர்கள், பிரிண்டர்கள், வேதிப் பொருட்கள், லேமினேஷன் பேப்பர்கள், ரூ. 3.5 லட்சம் ரொக்கப் பணம், 1000 அமெரிக்க டாலர்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கும்பல் கடந்த ஒரு வருடமாகவே இந்த போலி பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இவர்களுடன் மேலும் பலருக்கும் தொடர்பு இருக்கும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கோவிந்தராஜனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications