பன்னாட்டு முதலீடுகள்: சென்னை, ஹைதராபாத் முதலிடம்!

கர்நாடக மாநிலம் குல்பர்காவில், கர்நாடக தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எஸ்.பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கர்நாடகம் ரூ. 35,000 கோடி முதலீடுகளை இழந்துள்ளது.
இந்த முதலீடுகள் எல்லாம் சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும் போய் விட்டன. இதற்கு முக்கியக் காரணம் தமிழக, ஆந்திர அரசுகள் சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களை சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு கொண்ட நகரங்களாக மாற்றி வைத்திருப்பதுதான்.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள் சென்னை அல்லது ஹைதராபாத் நகரங்களைத்தான் அதிகம் விரும்புகின்றன. அங்கு முதலீடுகளை அதிக அளவில் குவிக்க அவை தயாராக உள்ளன.
கர்நாடக நகரங்களை விட சென்னை, ஹைதராபாத் நகரங்களில் சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும், பிற வசதிகளும், செளகரியங்களும், சிறந்த தொழிலாளர்கள் கிடைப்பதும் இதற்கு முக்கியக் காரணம்.
கர்நாடக மாநிலம் ஆண்டுதோறும் சராசரியாக நான்கு பெரும் பன்னாட்டு முதலீடுகளை இழந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமில்லாத தன்மையும் முதலீடுகள் கை நழுவிப் போக முக்கிய காரணம். இதனால் தொழில் வளர்ச்சி மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
ஆசியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற பெயர் பெங்களூருக்கு இருந்தாலும் கூட, அதற்குத் தேவையான, அதற்குப் பொருத்தமான வளர்ச்சியை பெங்களூர் இன்னும் அடையவில்லை.
பெங்களூர் நகரைச் சுற்றிலும் நிறைய துணை நகரங்களை ஏற்படுத்த வேண்டும். தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மாநில அரசு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றார் பாட்டீல்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications