தர்றோம்..தர்றோம்.. வேணாம்.. வேணாம்: 'எல்லாமே தலைகீழ்'!
சென்னை: ஸ்ரீசைலம் அணை நிரம்பி வருவதால் சென்னைக்கு கூடுதலாக நீரைத் திறந்துவிட ஆந்திரம் முன் வந்துள்ளது. ஆனால், சென்னை ஏரிகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் நீர் வேண்டாம் என தமிழகம் கூறிவிட்டது. இதையடுத்து கிருஷ்ணா கால்வாய் தாற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக தெலுங்கு-கங்கா என்ற கிருஷ்ணா கால்வாய் தோண்டப்பட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீசைலத்தில் இருந்து சென்னை வரை 408 கி.மீ. தூரத்துக்கு தோண்டப்பட்ட இந்தக் கால்வாயில் 1996ம் ஆண்டு முதல் ஆந்திரம் தண்ணீர் வழங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 2 தவணையாக மொத்தம் 15 டிஎம்சி தண்ணீரை ஆந்திரா வழங்க வேண்டும். ஆனால், கர்நாடகத்தைப் போலவே ஆந்திரமும் உடன்பாட்டின்படி சரியான அளவு தண்ணீரை கொடுத்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் போராட்டம் தான்.
இந் நிலையில் சமீப காலமாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருவதால் நிலைமை தலைகீழாகிவிட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழிவதால் கிருஷ்ணா நீரே தேவையில்லை என்ற நிலை உருவாரிவிட்டது.
ஆந்திராவிலும் கன மழை பெய்து வருவதால் ஸ்ரீசைலம் அணை நிரம்பிவிட்டது. இதனால் அங்கிருந்து நீரை தமிழகத்து திருப்பிட ஆந்திரா தானாகவே முன்வந்துள்ளது.
ஆனால் சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பதால் இப்போதைக்கு தண்ணீர் வேண்டாம் என்று தமிழகம் கூறிவிட்டது. கூடுதல் நீரை தேக்க சென்னையில் மாற்று வசதியோ நீர்த் தேக்கங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கிருஷ்ணா கால்வாய் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications