நகராட்சி துணைத் தலைவரை கொல்ல முயற்சி?
விருதுநகர்: ராஜபாளையம் நகராட்சி துணைத் தலைவரை காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி 40வது வார்டு உறுப்பினர் மணிகண்டராஜா. கடந்த சில தினங்களுக்கு முன் ராஜபாளையம் நகராட்சி துணைத் தலைவராக இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இவர் தனது வார்டுக்கு உட்பட்ட துரைசாமிபுரம் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இருந்தார். மேலும் மக்களிடம் குறைகளை கேட்டு மனுவையும் பெற்றுக் கொண்டு தனது ஆதரவாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்த பின்னர் தனது காரில் இரவு 10 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்
அப்போது எதிரே வேகமாக வந்த கார் மணிகண்டராஜாவின் காரின் மீது மோதும் வகையில் வந்தது. அதற்குள் மணிகண்டராஜாவின் கார் டிரைவர் சுதாரித்துக் கொண்டதால் நகராட்சித் தலைவரும், ஓட்டுனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து மணிகண்டராஜா ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், மணிகண்டராஜாவை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டிஎஸ்பி முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார்.
நகராட்சி துணைத் தலைவரை கொல்ல முயன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications