சென்னையிலிருந்து டொரண்டோ, நியூயார்க்குக்கு ஜெட் ஏர்வேஸ் புதிய சேவை

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் உள்நாடுகளில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது.
இந்நிறுவனம் வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் சென்னையிலிருந்து டொராண்டோ, நியூயார்க் ஆகிய இடங்களுக்கு பிரஸல்ஸ் வழியாக தினசரி விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
டிசம்பர் 6 முதல் சென்னையிலிருந்து டொராண்டோவிற்கு நள்ளிரவு 1.15 மணிக்கு புறப்படும் இந்த விமானம் (9W 226 ) காலை 7.15 மணிக்கு பிரஸல்ஸ் சென்றடையும். அங்கிருந்து 9.15 மணிக்கு புறப்பட்டு டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தை பிற்பகல் 12.55 மணிக்கு போய்ச் சேரும்.
டொரான்டோவில் இருந்து இரவு 2.30 மணிக்குக் கிளம்பும் விமானம் மறுநாள் காலை 9.30 மணிக்கு பிரஸல்ஸ் வந்தடையும். அங்கிருந்து 11.30க்குப் புறப்பட்டு பகல் 1.40 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த விமானத்தில் எகானமி கிளாஸ் கட்டணம் ரூ. 36,000 ஆகவும், பிஸினஸ் கிளாஸ் கட்டணம் ரூ. 1.57 லட்சமாகவும் இருக்கும்.
இந்த மார்க்கத்தில் ஏர்பஸ் 320 ரக விமானங்களை ஜெட் ஏர்வேஸ் பயன்படுத்தவுள்ளது. பிஸினஸ் கிளாசில் 30 இருக்கைகளும் எகானமி கிளாசில் 190 இருக்கைகளும் இருக்கும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications