தமிழக அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு

Subscribe to Oneindia Tamil


சென்னை: மலேசியாவில் கொலை செய்யப்பட்ட தமிழக வாலிபரின் உடலை தாயகம் கொண்டு வர உத்தரவிட்டும் அதை நிறைவேற்றாத தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்ைகப் பதிவு செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள குமாரகுறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீந்திரன். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் அங்கு கொலை செய்யப்பட்டார்.

அவரது உடலை தமிழகம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கோரி சுசீந்திரனின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, 3 வாரங்களுக்குள் சுசீந்திரனின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்ைக எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளருக்கு கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி உத்தரவிடப்பட்டது.

மேலும் 3 மாதத்திற்குள் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இதுவரை சுசீந்திரனின் உடல் தமிழகம் கொண்டு வரப்படவில்லை. இந்த நிலையில் இன்று உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக தமிழக அரசு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+