3 பவுன் நகைக்காக மருமகளைக் கொன்ற மாமியார் கைது
சென்னை: தாய் வீட்டிலிருந்து வரதட்சணையாக 3 பவுன் தங்க நகையை வாங்கி வராததற்காக மருமகளை தீ வைத்து எரித்துக் கொலை செய்த மாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வருபவர் மாடசாமி. இவரது மனைவி மங்கையர்க்கரசி (23). இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது, பெண் வீட்டார், 10 பவுன் நகையும், ரூ. 10 ஆயிரம் ரொக்கமும் தருவதாக கூறினர். ஆனால் கல்யாணத்தின்போது 7 பவுன் நகை மட்டுமே அவர்கள் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மாடசாமியின் தாயார் கன்னியம்மாள் (46), மங்கையர்க்கரசியை அடித்து, உதைத்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். திங்கள்கிழமை மங்கையர்க்கரசியை மீண்டும் அடித்து உதைத்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மருமகள் மீது ஊற்றி தீவைத்தார். மங்கையர்க்கரசியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே மங்கையர்க்கரசி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் நகர் காவல் நிலையத்தில் மங்கையர்க்கரசியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்து கன்னியம்மாள் கைது செய்யப்பட்டார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications