ஜெயா பிளஸ், ஜெயா மேக்ஸ் - ஜெயா டிவியின் புதிய சானல்கள் உதயம்

ஜெயலலிதாவின் முழு ஆசியுடன், அவரது முழு ஆதரவுடன் 1999ம் ஆண்டு ஜெயா டிவி தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது அந்த சேனலிலிருந்து மேலும் 2 புதிய சானல்கள் தொடங்கப்பட்டுள்ளன.
முழு நேர செய்தி சேனலான ஜெயா பிளஸ் மற்றும் பொழுதுபோக்குச் சானலான ஜெயா மேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரு சானல்களும் இன்று முதல் முழு நேர ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளன.
ஜெயா பிளஸ் சானலுக்கு தயாநிதி மாறன் மத்தியில் அமைச்சராக இருந்தபோது, அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக முன்பு ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு ஜெயா பிளஸ் டிவிக்கான உரிமத்தை வழங்கியது.
இந்த நிலையில் சமீபத்தில் ஜெயா பிளஸ் சானல் தனது பரீட்சார்த்த ஒளிபரப்பைத் தொடங்கியது. இன்று முதல் முழுமையான, முறையான ஒளிபரப்பு தொடங்கியுள்ளது.
ஜெயா டிவி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயா பிளஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் ஆகிய இரு சானல்களின் ஒளிபரப்பையும் இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
பின்னர் ஜெயலலிதா பேசுகையில், ஜெயா டிவிக்கு வழங்கப்பட்ட அதே ஆதரவை புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜெயா பிளஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் சானல்களுக்கும் வழங்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications