மெக்காவுக்குள் நுழைய கட்டுப்பாடு
மெக்கா: உரிய ஹஜ் பயண அனுமதி இல்லாமல், மெக்கா நகருக்குள் நுழைபவர்களுக்கு பெருமளவு அபராதம் விதிக்கப்படும். அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சவூதி அரேபிய பாஸ்போர்ட் இலாகாவின் சோதனைச் சாவடிகளுக்கான பொறுப்பு அதிகாரியான கலாபல்லா அல் துவார்கி கூறுகையில், மெக்கா நகரைச் சுற்றிலும் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனைச் சாவடிகள் வழியாக மட்டுமே மெக்கா நகருக்குள் நுழைய முடியும். முறையான ஹஜ் அனுமதி உத்தரவு இல்லாமல் மெக்காவுக்குள் நுழைய முயல்வோருக்கு பெரும் அபராதம் விதிக்கப்படும். அவர்களை நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நவம்பர் 6ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
மெக்காவில் வசித்து வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது. மற்ற ஹஜ் யாத்ரீகர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.
அதேபோல சவூதியைச் சேர்ந்த யாத்ரீகர்களும் கூட முறையான அனுமதி இல்லாமல் மெக்காவுக்குள் நுழைய முடியாது.
சட்டவிரோதமாக, யாத்ரீகர்களை மெக்காவுக்குள் அனுப்ப முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நபர் சவூதியைச் சேர்ந்தவராக இருந்தால் அவருக்கு 10 ஆயிரம் சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும். ஆட்களை அனுப்பும் நபர் சவூதியைச் சேராதவராக இருந்தால் கடும் அபராதம் விதிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்.
சோதனைச் சாவடிகள் வழியாக செல்லும் யாத்ரீகர்களின் ஆவணங்கள் அனைத்தும் தீவிரமாக பரிசீலிக்கப்படும். போலியான ஆவணங்களுடன் வருவதைத் தடுக்க நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சோதனைச் சாவடிகளில் பெண் போலீஸ் அதிகாரிகளும் பணியில் இருப்பார்கள் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications