மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: போலி என்கவுண்டரில், சொராபுதீன் கொல்லப்பட்டது நியாயமனதுதான் என்று தேர்தல் பிரசாரத்தில் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத் மாநிலம் மாங்க்ரோல் என்ற இடத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்சதின்போது, போலி என்கவுண்டரில் அப்பாவி இளைஞர் சொராபுதீன் கொல்லப்பட்டது குறித்து பேசினார் மோடி.
அப்போது, சொராபுதீன் போன்ற தீவிரவாதிகளை என்ன செய்வது என்று மோடி கேட்க, கூடியிருந்த லட்சக்கணக்கானோர், கொல்லுங்கள், கொல்லுங்கள் என்று கோஷமிட்டனர். அதுதான் நடந்தது, சொராபுதீனுக்குக் கிடைத்த தண்டனை சரியானதுதான் என்று கூறினார் மோடி.
அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சொராபுதீன் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது அவர் கொல்லப்பட்டதை குஜராத் அரசும் ஒத்துக் கொண்டது. இந்த வழக்கில் குஜராத் அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி ஆஜராகி வந்தார். ஆனால் தற்போது மோடியின் பேச்சால் அதிருப்தி அடைந்த துள்சி வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்.
இந்த நிலையில் மோடியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் பறந்தன. இந்தப் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி உள்ளிட்ட 3 ஆணையர்களும், மோடியின் பேச்சு அடங்கிய வீடியோவைப் பார்த்தனர்.
இதையடுத்து மோடியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாங்க்ரோல் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு நீங்கள் பேசியுள்ளது, வன்முறையை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் மதத்தையும் நீங்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்.
உங்களது பேச்சு தேர்தல் விதிமுறைகளையும், சட்டத்தையும் மீறிய வகையில் அமைந்துள்ளது.
அமைதியான முறையில் வாழும் இரு சமூகங்களுக்கு இடையே துவேஷத்தையும், வெறுப்பையும், வன்முறையையும் தூண்டும் வகையில் உங்களது பேச்சு அமைந்துள்ளது. இது தேர்தல் விதி மீறல் ஆகும்.
இதுகுறித்து டிசம்பர் 8ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் மிகவும் கடுமையாக இல்லை. ஒருவேளை மோடி இதற்குப் பதிலே அளிக்கவிட்டாலும் கூட அவரை தேர்தல் ஆணையத்தால் எச்சரிக்கை செய்ய மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications