தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை

சென்னை: தமிழகத்தின் வடபகுதிகளிலிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரின் முக்கியச் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியது.
வங்கக் கடலில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து தொடர்ந்து அதே இடத்தில் கடந்த சில நாட்களாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட பகுதிகள், கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக சென்னை நகரிலும், வட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் விடிய விடிய மழை பெய்கிறது. அதேபோல காலை நேரங்களிலும் கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து வருகிறது.
நேற்றும் காலை முதல் மதியம் வரை விட்டு விட்டு நல்ல மழை பெய்தது. அதேபோல இரவிலும் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையிலும் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக சென்னை நகரில் முக்கியச் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடி வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். நகரின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோல வேலூர், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications