கோரிக்கையை அரசு ஏற்றதால் வேளாண் மாணவர்கள் போராட்டம் வாபஸ்
மதுரை: வேளாண் மாணவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றதால் மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் தொடர் உண்ணாவிரதம் இருந்த வேளாண் மாணவர்கள் இன்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
வேளாண்மைத் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கு வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள், வனக் கல்லூரி, தோட்டக் கலைக் கல்லூரி ஆகியவற்றின் மாணவ, மாணவியர் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவ, மாணவியருக்கும், வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவ, மாணவியர் இறங்கியுள்ளனர். இதையடுத்து கல்லூரிகள், விடுதிகள் மூடப்பட்டன.
தொடர்ந்து 6 நாட்களாக நடந்து வந்த இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று மதுரை மற்றும் கோவையில் மட்டும் 19 மாணவிகள் உட்பட 25 பேர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
தொடர்ந்து பல மாணவிகளின் உடல்நிலை மேலும் மோசமடைந்து வந்தது.
இந்நிலையில் தமிழக அரசு, வேளாண் மாணவர்களின் 11 கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்று கொள்வதாகவும், அதனால் மாணவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியிருந்தது.
இதனால் அரசின் கோரிக்கையை ஏற்ற மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததுடன், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் என மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications