கடத்தப்பட்ட 5 மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்தது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையால் கடத்திச் செல்லப்பட்ட 5 பாம்பன் மீனவர்களும் நேற்று இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பாம்பன் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சில மீனவர்கள், டிசம்பர் 1ம் தேதி திசை மாறிச் சென்று தலைமன்னார் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றிச் சூழ்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவர்களின் மீன்பிடி வலைகள், மீன்களை கடலில் தூக்கிப் போட்டனர். அதன் பிறகு 5 மீனவர்களையும், அவர்கள் இருந்த படகையும் கொண்டு சென்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட ஐந்து மீனவர்களையும் மீட்க தமிழக மீன்வளத்துறை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை 5 மீனவர்களையும் இலங்கை கடற்படை, இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைத்தது.
அவர்களை நடுக் கடலில் வைத்து இந்திய கடலோரக் காவல் படை பெற்றுக் கொண்டது. பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து நான்கு படகுகளில் வந்த 21 மீனவர்களும், தங்களது பகுதி மீனவர்களை அழைத்துக் கொண்டு பாம்பன் புறப்பட்டுச் சென்றனர்.
இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட படகையும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications