வேண்டுமன்றே குற்றம் சாட்டும் ராமதாஸ்- அமைச்சர் எம்.ஆர்.கே
கன்னியாகுமரி: தமிழக அரசு மீது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டும் என்றே குற்றம் சாட்டுகிறார், இது சரியல்ல என்று மாநில நல்வாழ்வுத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
நடப்பு ஆண்டு மருத்துவத் துறை மேம்பாட்டு பணிக்காக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு விழுப்புரம், தர்மபுரி, திருவாரூர் ஆகிய 3 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கடந்த டிசம்பர் 6ம் தேதி வரை 4,491 வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 48 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். அடுத்த 24 மாதங்களில் 9,000 முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொரு மருத்துவ முகாமுக்கும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை செலவு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு 2.5 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.119 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,447 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் 1,000 ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 45 சதவீத காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 230 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,775 புதிய மருத்துவர்களும், 1,000 கிராம செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால் பாமக நிறுவனர் டாக்டர் அரசு மீது வேண்டும் என்றே குற்றம் சாட்டுகிறார். இது சரியல்ல என்றார் பன்னீர்செல்வம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications