குஜராத்தில் முதல் கட்ட பிரசாரம் ஓய்ந்தது
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் வருகிற 11ம் தேதியும், 2ம் கட்டமாக 16ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 87 தொகுதிகளும் சௌராஷ்டிரா பகுதியில் உள்ளன. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிந்தது.
முதல் கட்ட வாக்குப் பதிவை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தொகுதிகளிலும் மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications