சபரிமலையில் தமிழக பக்தர் மரணம்
Subscribe to Oneindia Tamil
பம்பை: சபரிமலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைந்தார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ஏழுமலை (54). இவர் சபரிமலைக்கு மாலை போட்டுச் சென்றிருந்தார்.
ஏழுமலை நீலிமலை பகுதியில் ஏறிக் கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பம்பையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் மரணமடைந்தார்.
மண்டல பூஜை ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை சபரிமலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications