தமிழ் தெரிந்த கலெக்டர்களை நியமிக்க கோரிக்கை
திருச்சி: தமிழ் தெரிந்த ஐஏஎஸ் அதிகாரிகளை கலெக்டர்களாக நியமிக்க வேண்டும் என்று அம்பேத்கார் மக்கள் இயக்க தலைவர் வை.பாலசுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி வந்த வை.பாலசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில், அமுதா என்ற பெண்ணை போலீசார் விபச்சார வழக்கில் கைது செய்து 12 மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இது சட்ட விரோதம் ஆகும். அமுதா மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு.
இந்த சம்வத்தில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பெண்ணிற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளும் கலெக்டர்கள் அந்த மனுவை படிக்க முடிவதில்லை. காரணம் அவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. அதனால் மக்கள் என்ன கோரிக்கைக்கு மனு கொடுத்தனர் என்பதே தெரியாமல் போய் விடுகின்றது.
எனவே மாவட்ட கலெக்டர்களாக தமிழ் பேச, படிக்கத் தெரிந்த அதிகாரிகளையே நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பாலசுந்தரம்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications