அகதிகள் முகாம்களை சீரமைக்க ரூ. 6 கோட
திருச்சிராப்பள்ளி: இலங்கை தமிழ் அகதிகளுக்கான முகாம்களில் போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ரூ. 6 கோடி செலவிடப்படும் என மறுவாழ்வுத்துறை ஆணையர் கற்பூரசுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு நடப்பாண்டில் ரூ. 42 கோடி நிதியை அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்காக ஒதுக்கியுள்ளது. இதில் ரூ. 6 கோடி நிதி, இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
இதுதவிர குறைந்த விலையில் அரிசி உள்ளிட்டவற்றை விநியோகிப்பது, பாத்திரங்கள் வழங்குவது, பண உதவி உள்ளிட்டவையும் செய்யப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 117 அகதிகள் முகாம்கள் உள்ளன. 73 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ளனர். அனைத்து முகாம்களிலும் குடிநீர், கழிவு நீர் வசதிகளை முறையாகச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதிலமடைந்துள்ள மேற்கூரைகளைச் சரி செய்யும் பணியும் திட்டமிடப்பட்டு வருகிறது.
பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் ரூ. 3 கோடி மதிப்பில் முகாம்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் திட்டமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அகதிகளின் வாழ்க்கைத் தரத்ைத மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் கற்பூரசுந்தரபாண்டியன்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications