சிறுவணிகர்களைக் காக்க ஜன. 29ல் வணிகர்கள் உண்ணாவிரதம்
திருச்சி: சிறு வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த தமிழகத்தில் உள்ள 140க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.
திருச்சியில் இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தமிழ்நாடு வர்த்தகர் சம்மேளன மாநிலத் தலைவர் ஏ.கே.ஹூசேன், பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட வர்த்தகர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதியில், முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கவுள்ளோம்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தக சங்கமும், தமிழ்நாடு வர்த்தர் சம்மேளனமும் ஏற்பாடு செய்கின்றன.
இந்தப் போரட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக 5 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சிறு வணிகர்கள் பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
இந்தக் கமிட்டி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வியாபாரிகள், வர்த்தர்களிடம் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு திரட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications