காவல் நிலையத்தில் வாலிபர் மர்ம சாவு: எஸ்.ஐ மீது கொலை வழக்கு
சாத்தான்குளம்: காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் இறந்ததால் சப்-இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி, சாத்தான்குளம் விரிகோட்டார் தெருவைச் சேர்ந்தவர் டேவிட் மகன் அருண்பாரத். இவரது வீட்டிற்கு அருகில் மெக்கானிக் வேலை பார்த்து வரும் ஜான்சன் என்பவர் குடியிருக்கிறார்.
வேலைக்கு எதுவும் செல்லமால் ஊர் சுற்றி வந்த அருண்பாரத் கடந்த 2006ம் ஆண்டு ஜீன் மாதம் குடிபோதையில் ஜான்சனிடம் சென்று தகராறு செய்தார்.
இதுகுறித்து அவர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் அருண்பாரத்தை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். விசாரணையின் போது அருண்பாரத் தீடீரென மர்மமான முறையில் இறந்து விட்டார்.
ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் அடித்ததில்தான் அருண்பாரத் இறந்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பொதுமக்கள் சார்பில் சாத்தான்குளம் பஸ் நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஸ்ரீகுமாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் திருச்செந்தூரில் தங்கியிருந்த ஸ்ரீகுமார் திடீரென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து ஸ்ரீகுமார் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையில் அருண்பாரத் இறந்தது குறித்து திருச்செந்தூர் கோட்டாச்சியர் மருதநாயகம் நடத்திய விசாரணையில் அருண்பாரத் போலீஸ் தாக்கியதில் இறந்ததாக தெரிய வந்தது. இதுகுறித்து அவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி ஜோசப்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பிரவின்குமாருக்கு உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில் அருண்பாரத் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்ககோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் தற்போது கோவில்பட்டி அருகே உள்ள புதூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications