மதுரை சாலையில் ஓடி உயிரிழந்த புள்ளி மான்
மதுரை: மதுரை நகரில் திடீரென ஓடி வந்த புள்ளி மான் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்திருந்த அந்த மான், காட்டில் கொண்டு போய் விடப்பட்ட பின்னர் பரிதாபமாக உயிரிழந்தது.
மதுரை திருமலை நாயக்கர் மஹால் உள்ள சாலையில் திடீரென நேற்று மாலை ஒரு மான் துள்ளிக் குதித்து ஓடி வந்தது. இதைப் பார்த்த வாகனதாரிகள் குழப்பமடைந்து வாகனங்களை ஓட்ட முடியாமல் நிறுத்தினர்.
போக்குவரத்தைப் பார்த்து மிரண்டு, மருண்டு அங்கும் இங்கும் ஓடிய அந்த மானின் உடலில் நாய்கள் கடித்துக் குதறியதால் ஏற்பட்ட காயங்கள் காணப்பட்டன.
இதையடுத்து வனத்துறையினருக்குத் தகவல் போனது. வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து அந்த மானைப் பிடித்தனர். பின்னர் கால்நடை மருத்துவமனைக்கு மான் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சிகிச்சை அளித்த பின்னர் சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு காட்டில் மானை விட்டனர். ஆனால் நடக்கவே முடியாமல் சுருண்டு விழுந்த அந்த மான், சில விநாடிகளில் பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த மானுக்கு 6 வயது இருக்கும் எனத் தெரிகிறது. திருமலை நாயக்கர் மஹால் பகுதியில் வசிக்கும் யாரோ இந்த மானை வீட்டில் வைத்து வளர்த்து வந்துள்ளனர் என்று தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications