உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள்- கருணாநிதியிடம் ஸ்டாலின் அறிக்கை

சென்னை: உள்ளாட்சிகளுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கிட வகை செய்யும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார்.
1996ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது உள்ளாட்சிகளுக்கான அதிகாரத்தை பரவலாக்க மாநில திட்டக்குழு உறுப்பினர் எல்.சி.ஜெயின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
பின்னர் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ.சி.மணி தலைமையில் மீண்டும் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த இரு குழுக்களும் வழங்கிய பெருவாரியான பரிந்துரைகளை கருணாநிதி அமலாக்கி, உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கச் ெசய்தார்.
இந் நிலையில் மீண்டும் முதல்வரான கருணாநிதி, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை ஆய்வு செய்யவும், அவற்றின் செயல்பாட்டில் உள்ள குறைகளைக் கலையவும் அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜனவரி மாதம் இன்னொரு குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு உள்ளாட்சிகளின் அதிகாரப் பரவலாக்கம் குறித்து 12,618 கிராம ஊராட்சித் தலைவர்களின் கருத்துகளையும் அறிய ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி, விருதுநகர் ஆகிய நகரங்களில் கிராம ஊராட்சித் தலைவர்களின் மண்டல கருத்தரங்குகளை நடத்தியது.
மேலும் அரசுத் துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தியது. சில மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்தியது.
இதையடுத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது குறித்த பரிந்துரைகள் அடங்கிய 2 அறிக்கைகளை இந்தக் குழு தயாாித்தது.
இந்த 2 அறிக்கைகளையும் அமைச்சர் ஸ்டாலின் இன்று முதல்வர் கருணாநிதியிடம் சமர்பித்தார்.
இதில் உள்ளாட்சிகளுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications