மர்ம உறுப்பில் மிதித்து வாலிபர் கொலை!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வாலிபர் ஒருவரை மர்ம உறுப்பில் மிதித்து கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அடுத்த கந்தர்வ கோட்டை அருகில் மேலவயல் என்ற பகுதியில் வசிப்பவர் ரங்கசாமி மகன் சிவக்குமார் (27). இவரது மனைவி முத்துலட்சுமி.
முத்துலட்சுமிக்கு சந்திரகாசு மற்றும் பாண்டியன் என்ற இரண்டு சகோரதரர்கள் உள்ளனர். இவர்கள் சம்பவத்தன்று முத்துலட்சுமி வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதை அவரது கணவர் சிவக்குமார் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையை வாக்கு வாதம் முற்றி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது சிவக்குமாரின் மர்ம உறுப்பை சந்திரகாசு மற்றும் பாண்டியன் ஆகியோர் தாக்கியுள்ளனர். இதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து சிவக்குமார் மனைவி முத்துலட்சுமி கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்தையா வழக்கு பதிவு செய்தார்.
சிவக்குமாரின் மர்ம உறுப்பில் மிதித்து கொலை செய்த சந்திரகாசு மற்றும் பாண்டியன் ஆகியோர் தலைமறைவு ஆகிவிட்டனர். அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications