தென்னிந்தியாவில் கால்பதிக்க பிரஸ்டீஜ் உடன் சேரும் பிவிஆர்
பெங்களூர்: தென்னிந்தியா முழுவதும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளை அமைப்பதற்காக பிவிஆர் சினிமாஸ் பிரஸ்டீஜ் குழுமத்துடன் சேர்ந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
பெங்களூரில் ஃபோரம் வணிக வளாகத்தில் 11 திரையரங்குகளை பிவிஆர் நிறுவனம் வைத்துள்ளது. இதற்கு அதிக வரவேற்பு இருந்ததையடுத்து தென்னிந்தியா முழுவதும் கால்பதிக்க முடிவு செய்தது.
பிவிஆர் சினிமாஸின் தலைவர் சஞ்சீவ்குமார் கூறியதாவது,
அடுத்த 3 வருடங்களில் தென்னிந்தியா முழுவதும் 10 மல்டி ஃபிளக்ஸ் வணிக வளாகத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த 10 வணிக வளாகத்திலும் மொத்தமாக 60 திரையரங்குள் அமைக்கப்படும். இதற்கான கட்டுமானப் பணிகளை பிரஸ்டீஜ் குழுமம் கவனிக்கும்.
இந்த 10 வணிக வளாகங்களும் தென்னிந்திய நகரங்களான சென்னை, ஹைதராபாத், கொச்சி, மங்களூர் மற்றும் மைசூரில் அமைக்கப்படும். பெங்களூரில் மேலும் 3 வணிக வளாகங்கள் திரையரங்குகளுடன் அமைக்கப்படும். இது தவிர மேலும் 2 வணிக வளாகம் அமைக்க நகரங்கள் இனிமைல் தேர்வு செய்யப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.350 கோடி முதலீட்டில் 250 திரையரங்குகளை நாடு முழுவதும் அமைக்க பிவிஆர் முடிவு செய்துள்ளது என்றார்.
இதுகுறித்து பிரஸ்டீஜ் குழுமத்தின் தலைவரும், நிர்வாக அதிகாரியுமான இர்ஃபான் ரஸாக் கூறியதாவது,
எங்கள் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 20 மல்டி ஃபிளக்ஸ் ஷாப்பிங் மால்களை கட்ட உத்தேசித்துள்ளது. பெங்களூரில் பிவிஆர் நிறுவனத்தின் மால்கள் ஒயிட்ஃபீல்டு மற்றும் சாந்திநிகேதன் ஆகிய இடங்களில் அமைக்கப்படும். ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் இந்த மல்டி ஃபிளக்ஸ் மால்கள் அமைக்கப்படும்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!












Click it and Unblock the Notifications