பெங்களூரிலிருந்து வாரம் ஒருமுறை சென்னை வந்து விபச்சாரம்-கல்லூரி மாணவி கைது

Subscribe to Oneindia Tamil


சென்னை: பெங்களூரில் இருந்து வாரம் ஒருமுறை சென்னை வந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.

சென்னை பாண்டி பஜார், பனகல் பார்க் பகுதிகளில் நள்ளிரவில் விபச்சாரப் பெண்களின் நடமாட்டம் இருப்பது குறித்து கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மேற்பார்வையில், விபசார தடுப்பு உதவி கமிஷனர் சங்கரபாண்டியன் தலைமையிலான படை மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டது.

அப்போது இந்த பெண்களுக்கு கஸ்டமர்களைப் தரும் புரோக்கரான ராஜு என்பவர் மாறு வேடத்தில் இருந்த போலீஸ்காரரை அணுகி பெண் வேண்டுமா என கேட்க, தலையை ஆட்டினார் மாறுவேட காக்கி.

ரூ.6,000 கொடுத்தால் கல்லூரி மாணவி கிடைப்பார் எனக் கூறவே மாறுவேட போலீஸ்காரரும் ஓகே சொன்னார்.

இதையடுத்து பணத்தை வாங்கிய புரோக்கர் ராஜு சிறிது நேரத்தில் கல்லூரி மாணவி ஒருவரை அழைத்து வரவே இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அந்த கல்லூரி மாணவியின் பெயர் ரீனா (19). இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். ஒரு கல்லூரியில் படித்து படிக்கிறார். இவரது தந்தை இறந்துவிட்டாராம். தாயார் மட்டுமே உள்ளார்.

தனது குடும்ப செலவுக்காகவும், படிப்பு செலவுக்காகவும் வாரத்தில் ஒருமுறை சென்னை வந்து, விபசார தொழிலில் ஈடுபட்டு பணத்துடன் பெங்களூர் திரும்பி செல்வேன் என்று அந்த மாணவி போலீசாரிடம் கூறியுள்ளார்.

டெல்லி பெண் கைது:

அதேபோல கிண்டியில் சன்னி என்ற விபசார புரோக்கரும் அவருடன் தங்கியிருந்து விபச்சாரம் செய்து வந்த டெல்லியைச் சேர்ந்த பூஜா சர்மா (21) என்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

புரோக்கர்கள் ராஜு, சன்னி இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாணவி ரீனா, டெல்லி பெண் பூஜா இருவரும் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்கு பெண்களை அனுப்பி விபச்சாரம்:

அதே போல விருகம்பாக்கம் பகுதியில் புரோக்கர் கணேஷ் என்பவர் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பெண்களை வீடுகளுக்கே அனுப்பி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தார்.

அவரையும் போலீசார் கைது செய்தனர். அவருடன் கூட்டு சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட ராயபுரத்தை சேர்ந்த பெண் புரோக்கர் ஜெயா (48), சேத்துப்பட்டைச் சேர்ந்த கவிதா (32), இந்து (36), ராயப்பேட்டையை சேர்ந்த சம்ருத் (26), ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமி (20) ஆகியோரை போலீசார் வளைத்தனர்.

புரோக்கர்கள் ஜெயா, கணேஷ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். சம்ருத், கவிதா, இந்து, லட்சுமி ஆகியோர் மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+