அரசு செயலாளர் பெயரில் ரூ. 11 லட்சம் சுருட்டிய வழக்கறிஞர்!
தர்மபுரி: தர்மபுரியில் அரசுத்துறை செயலாளர் என்ற பெயரில் டாக்டரிமும் வனத்துறை அதிகாரியிடமும் ரூ. 11 லட்சம் பறித்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் குமார் (55). இவருக்கு 4 மனைவிகள். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர் இவர்.
இந் நிலையில் ஒசூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் பொன்ராஜிடம் தமிழக அரசு சுகாதாரத் துறை செயலாளர் போல பேசி ரூ. 6 லட்சம் கேட்டு வாங்கியுள்ளார்.
அதே போல தமிழக வனத்துறை செயலாளர் போல வனத்துறை அதிகாரி கணேசனிடம் ரூ. 5 லட்சம் கேட்டு வாங்கியுள்ளார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த இருவரும் இது குறித்து போலீஸ்ல் புகார் செய்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் வழக்கறிஞர் குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து தலை மறைவான குமார் இப்போது போலீசில் பிடிபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications