ராமர் பாலத்தில் பாஜகவினர் நடக்க தயாரா-மத்திய அமைச்சர் வேங்கடபதி
கடலூர்: ராமர் பாலம் இருந்தால் அதில் பாஜகவினர் நடந்து போக வேண்டியதுதானே என மத்திய சட்டத்துறை இணையமைச்சர் வேங்கடபதி கூறினார்.
கடலூர் நகர பகுத்தறிவாளர் கழகம் சார்பில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 75வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பேராசிரியர் குழந்தைவேலன் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் வேங்கடபதி பேசுகையில்,
திராவிடர் கழக தலைவர் வீரமணி பிறந்த மண்ணாகிய கடலூர் தொகுதியில் நான் எம்.பியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரால் திருஞான சம்பந்தர் என்று பெருமைபட அழைக்கப் பட்டவர் வீரமணி.
தமிழன் யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல. பெரியாரின் கொள்கைகளை பின்பற்றும் தமிழன் தலை நிமிர்ந்து வாழ்வான். பெரியாரின் கொள்கைகளை சிறு வயதிலேயே ஏற்றுக்கொண்டவர் வீரமணி. திராவிட இயக்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு அரும்பணியாற்றி வருகிறார்.
பகுத்தறிவு கருத்துக்களை மக்களிடையே பரப்புவதில் திமுகவும், திராவிடர் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்பட்டு வருகின்றன. பிற்போக்குவாதிகள் பதவிக்காக எதையும் செய்வார்கள். ராமரை வீதிக்கு கொண்டு வருவார்கள்.
கருணாநிதியும் வீரமணியும் இருக்கும் வரை இந்த வேலை இங்கு எடுபடாது. தேர்தல் வெற்றிக்காக கொள்கைகளை காற்றில் பறக்க விடும் கோழைகள் அல்ல நாங்கள்.
திமுகவும், திராவிடர் கழகமும் சுய மரியாதை சிந்தனையை பாதுகாக்கும் இயக்கங்கள்.
தமிழர்களின் கனவு திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை பாஜகவினர் முடக்கப் பார்க்கிறார்கள். நீங்கள் தானே ஆடம்ஸ் பிரிட்ஜ் என்றீர்கள். இன்று மணல் திட்டை பார்த்து ராமர் பாலம் என்று கூறுவது ஏன்.
பாலம் இருந்தால் இலங்கைக்கு பாஜகவினர் நடந்து போக வேண்டியதுதானே. சேது சமுத்திர திட்டத்துக்கு இடையூறாக உள்ள தடைகள், சதிகள் விரைவில் முறியடிக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வேங்கடபதி பரிசுகள் வழங்கினார்.
விழாவில் திராவிடர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், தலைமைக் கழக பேச்சாளர் யாழ்திலீபன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தண்டபாணி, செந்தில்குமார், கவிஞர் எழிலேந்தி, கடலூர் நகரத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications