மருத்துவ மாணவர்கள் கருணாநிதியுடன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

Medical students with CM Karunanidhi
சென்னை: மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டக் குழுவினர் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்து ஆவண செய்வதாக உறுதியளித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவப் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது, கட்டாய கிராம சேவை ஆகியவற்றை எதிர்த்து இந்தப் போராட்டம் நடந்தது.

இதையடுத்து தலையிட்ட முதல்வர் கருணாநிதி, மருத்துவ மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். இன்னும் நடைமுறைக்கே வராத ஒரு உத்தரவை எதிர்த்துப் போராடுவது சரியன்று. மருத்துவ மாணவர்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக அறிவித்தார்.

இதையடுத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்த நிலையில் இன்று மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டக் குழுவினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். அப்போது தங்களது கோரிக்கை குறித்து ஆவண செய்வதாக உறுதியளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+