ஜெவை அவதூறாக பேசிய வழக்கு-நீதிமன்றத்தில் நாஞ்சில்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த அதிமுக ஆட்சியில் இது நடந்தது. புதுக்கோட்டை அருகே உள்ள கந்தர்வகோட்டையில் நடந்த மதிமுக பொது கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத் அன்றைய முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை பற்றி மிக அவதூறாகப் பேசினார்.
இதையடுத்து அவர் மீது கந்தர்வ கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஜெயபிராகாஷ் முன் சம்பத் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அதை ஜனவரி 21 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நாஞ்சில் சம்பத் புதுக்கோட்டைக்கு எப்போது வந்தாலும் அதிமுகவினர் மரியாதை நிமித்தமாக வரவேற்பு கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை வந்த நாஞ்சில் சம்பத்தைக் கண்டு அதிமுகவினர் ஒடி ஒழிந்தது சுவாரஸ்யமாக இருந்தது.
இந்த வழக்கை காண திமுகவினர் திரண்டு வந்தது அதை விட சுவாரஸ்யம்.












Click it and Unblock the Notifications