மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்று கணவன் தற்கொலை
சென்னை: மனைவியை சுத்தியலால் அடித்துக் கொடூரமாக கொலை செய்த கணவர் பின்னர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் வினாயகம் (25). இவரும், இவரது மனைவியும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் மனைவியின் நடத்தை மீது வினாயகத்திற்கு சந்தேகம் வந்தது. இதுதொடர்பாக சமீப காலமாக மனைவியுடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வினாயகத்திற்கும், அவரது மனைவிக்கும் வழக்கம் போல சண்டை வந்தது. அப்போது மனைவியை அடித்து விட்டார் வினாயகம்.
சண்டை முடிந்த பின்னர் வினாயகத்தின் மனைவி அழுதபடியே தூங்கி விட்டார். இந்த சமயத்தில், திடீரென கோபம் கொண்ட வினாயகம், வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் சரமாரியாக அடித்தார்.
அதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த வினாயகத்தின் மனைவி அங்கேயே பலியானார்.
மனைவியைக் கொன்ற பின்னர் அவரது உடலை ஒரு துணியால் மூடிய வினாயகம் ஒரு மாலையையும் உடல் மீது வைத்தார். பின்னர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு கடிதம் எழுதி உடல் மீது வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
நேராக கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வந்த அவர் அந்த வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலைதான் இந்த கொலையும், தற்கொலை குறித்த விவரமும் தெரிய வந்தது. போலீஸார் வினாயகத்தின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications