ஊழியர்கள் மன அழுத்தம்: பிபிஓக்கள் புதிய உத்தி
டெல்லி: கடுமையான வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து தங்களது ஊழியர்களை வெளிக்கொணர்ந்து அவர்களை ரிலாக்ஸ் ஆக்க பல்வேறு உத்திகளை பிபிஓ நிறுவனங்கள் கையாள ஆரம்பித்துள்ளன.
இது கம்ப்யூட்டர் காலம். கம்ப்யூட்டர் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் அலுவலகங்களிலேயே நீண்ட நேரம் தங்க நேரிடுகிறது. சுருங்கச் சொல்வதாக இருந்தால் விரிவுபடுத்தப்பட்ட வீடுகளாக அலுவலகங்கள் மாறி விட்டன.
வேலைப்பளு அதிகம் இருப்பதன் காரணமாக ஊழியர்களுக்கு மன அழுத்தம், பதட்டம், சோர்வு, சரியாக சாப்பிடாமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதிலிருந்து தங்களது ஊழியர்களை வெளிக் கொண்டு வரவும், அவர்களின் உடல் நலம், மன நலத்தை பேணிக் காக்கவும் பிபிஓ நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன.
உடற் பயிறசிக் கூடங்கள், பொழுதுபோக்கு கிளப்கள், விளையாட்டுக்கள் ஆகியவற்றில் தங்களது ஊழியர்களின் கவனத்தை அவை திருப்பி விடுகின்றன. அலுவலக வளாகங்களிலேயே இவை அமைக்கப்படுகின்றன.
இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த விகஸ்டமர்ஸ் நிறுவன இயக்குநர் நவீன் ஜோஷ்வா கூறுகையில், எங்களது நிறுவன வளாகத்தில் வாரம் முழுவதும் இயங்கக் கூடிய ஊழியர்கள் கிளப் உள்ளது. இங்கு டேபிள் டென்னிஸ், செஸ், கேரம், கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள், இன்டர்நெட் பார்லர்கள் உள்ளிட்டவை உள்ளன. தங்களது ஓய்வு நேரத்ைத ஊழியர்கள் இங்கு செலவிடலாம்.
இதுதவிர வெளிப்புற விளையாட்டுக்களான பேட்மிண்டன், கூடைப் பந்து போன்றவற்றுக்கும் வசதி செய்துள்ளோம். மேலும் வார இறுதி நாட்களில் சின்னதாக டூர் அடித்தல், மலையேற்றப் பயிற்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள் உள்ளிட்டவற்றுக்கும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்றார்.
ஸான்சா இந்தியா நிறுவன மூத்த துணைத் தலைவர் விக்ரம்கராயி கூறுகையில், நடனப் போட்டிகள், பேஷன் ஷோக்கள், இசைப் போட்டிகளை நாங்கள் எங்களது ஊழியர்களுக்காக நடத்துகிறோம். இதன் மூலம் அவர்களின் மனசு லேசாகிறது, கூடுதலாக வேலை பார்க்க புத்துணர்ச்சி கிடைக்கிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications