தேனிலவுக்கு வந்து சிறை சென்ற பாகிஸ்தான் பெண்
ஆக்ரா: தேனிலவுக்காக இந்தியாவுக்கு வந்த இடத்தில், விசா விதி மீறல் புகாரில் சிக்கி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த புதுப் பெண்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஷாபா ஷேஸாதி. சமீபத்தில் இவருக்கும், பாகிஸ்தானில் பிறந்து இங்கிலாந்தில் செட்டிலான ஆரிப் பட் என்பருக்கும் இடையே திருமணம் நடந்தது.
இதையடுத்து இருவரும் தேனிலவுக்காக இந்தியா வந்தனர். இதில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கான விசாவை ஆரிப் பட் பெற்றிருந்தார். ஷாபாவுக்கு டெல்லியில் மட்டும் பயணம் செய்யும் விசா வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இருவரும் அதை மீறி ஆக்ராவுக்கு வந்தனர். தாஜ்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினர். உள்ளூர் புலனாய்வுப் பிரிவினர் இருவரின் விசா ஆவணங்களை சோதித்துப் பார்த்தபோது விசா விதிமுறைக்கு மாறாக ஷாபா ஆக்ரா வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஷாபாவை கைது செய்து ஆக்ரா நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 24ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஷாபா சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications