தாயின் 2வது கணவர் செக்ஸ் தொல்லை-சட்டக்கல்லூரி மாணவி பகீர் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாயின் இரண்டாவது கணவன் தனக்கு 8 வயது முதல் செக்ஸ் தொல்லை தந்து வருவதாக சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் ரஜனி பிளாசா அபார்ட்மென்டில் வசித்து வருபவர் மெஹ்ஜபீன் (வயது 52). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். மெஹ்ஜபீனின் கணவர் 20 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

இவரது மகள்கள் தாகிரா (வயது 27), ஆரிபா (20). இருவருமே கணவனை பிரிந்து வாழ்கின்றனர்.

இதில் தாகிரா கோவை சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந் நிலையில் சென்னை அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தாகிரா ஒரு பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில்,

எனக்கு 7 வயதானபோதே தந்தை இறந்துவிட்டார். இதையடுத்து தாய்க்கும் மெக்கானிக் ரவி செல்வம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டிலேயே இருவரும் உல்லாசமாக பொழுதை கழிக்க ஆரம்பித்தனர். அவர் மூலமாக என் தாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து ரவி செல்வத்தை 2வது கணவராக வைத்துக் கொண்டார். அப்போது எனக்கு வயது 8. அப்போது முதலே ரவி செல்வம் சிறுமியாக இருந்த என்னையும் பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினார். இதனால் நரக வேதனை அனுபவித்து வருகிறேன்.

அதே ேபால என் தங்கை ஆரிபாவுக்கும், ரவி செல்வம் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதையடுத்து என்னை பிலிப்ஸ் என்பவருக்கு என் தாயார் திருமணம் செய்து கொடுத்தார். ஆனால், அவருக்கு ரவி செல்வம் பற்றிய விவரம் தெரியவந்ததும் அவர் என்னை விட்டுப் பிரிந்து விட்டார்.

அதே போல ரவி செல்வத்தால் ஆரிபாவையும் அவரது கணவர் விட்டுச் சென்று விட்டார். ஆனால், எங்கள் வாழ்வை சீரழித்த ரவி செல்வத்தை எனது தாய் தொடர்ந்து அதே வீட்டில் தங்க வைத்துள்ளார்.

நான் இப்போது கோவை சட்டக்க ல்லூரியில் படித்து வருகிறேன். விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தேன். ஆனால், எனது படுக்கை அறைக்குள் நுழைந்த ரவி செல்வம் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.

ஆனால், என் தாயார் அவரை கண்டிக்காமல், என்னிடம் "உனக்கு தான் கணவன் இல்லையே, கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் என்ன, அட்ஜஸ் செய்து போக வேண்டியதுதானே'' என்று டார்ச்சர் தந்தார்.

ரவி செல்வம் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு தர வேண்டும். இவ்வாறு தாகிரா தனது புகாரில் கூறியுள்ளார்.

ஆனால், புகாரை வாங்கிய போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் அவருக்கே அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் நொந்து ேபான தாகிரா, தனக்கு நேர்ந்த செக்ஸ் கொடுமையை விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந் நிலையில் இந்த விவகாரத்தில் தாகிராவின் தாயார் புதிய புகாரைக் கூறியுள்ளார். தாகிராவும் அவரது விவகாரத்து வழக்கை கவனித்து வரும் வக்கீலுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்புமாறும் போலீசாரிடம் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து தாகிராவையும் வழக்கறிஞரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால். அவர்கள் வரவில்லை. இதையடுத்து டாக்டர் மெஹ்ஜமீன் தாகீராவை வீட்டை விட்டு வெளியேற சொல்லி உள்ளார். அப்போது ரவி செல்வமும் உடனிருந்து சத்தம் போட்டுள்ளார்.

இந் நிலையில் தான் தாகிரா காவல் நிலையத்தில் ரவி செல்வம் மீதும் தாயார் மீதும் புகார் கொடுத்துள்ளார்.

இதில் எந்தத் தரப்பு உண்மை பேசுகிறது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+