இன்டர்நெட் மூலம் பண மோசடி : 12 பேர் கொண்ட கும்பல் பெங்களூரில் கைது
பெங்களூர்: பல்வேறு இணையதள குற்றங்களில் ஈடுபட்டு வந்த விருதுநகரைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவை பெங்களூர் சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவைச் சேர்ந்த மேலும் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகரைச் சேர்ந்த ஜோசப் 1998ம் ஆண்டு பெங்களூருக்கு வந்தார். இங்குள்ள விஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலையில் சேர்ந்தார். தற்போது இந்தியா மார்க்கெட் ரிசர்ச் பீரோவில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜோசப் தனது நண்பர்கள் உள்பட 15 பேருடன் சேர்ந்து இணையதளங்கள் மூலமாக, பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் புகுந்து பல லட்சம் பணத்தை சுருட்டியுள்ளார். மேலும் பெருமளவிலான தொகைக்கும் முறைகேடாக செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்துள்ளனர்.
இவர்களின் மோசடி இந்த அக்டோபரில்தான் தெரிய வந்த்து. அனலாக் இன்போடெக் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த கார்ல் பிரகன்ஸா என்பவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.40,000 பணம், மும்பையில் உள்ள, மெல்பா ஜெரோலின் நாடார் என்பவரின் சிட்டி வங்கிக் கணக்கு ஒன்றுக்கு முறைகேடாக மாற்றப்பட்டிருப்பதாக பெங்களூர் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இந்த விசாரணையில் ஜோசப்பின் குற்றம் வெளிப்பட்டது. இதேபோல கார்ல் பிரகன்ஸாவிடமிருந்து ரு. 1 லட்சத்து 27 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
ஜோசப்தான் இந்தக் குற்றத்திற்குக் காரணம் எனத் தெரிய வந்த்தும் அவரையும், அவரது கூட்டாளிகள் 11 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
ஜோசப் இதுபோல 7 சைபர் குற்றச்செயல்களில் தொடர்புகொணடுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இன்டர்நெட் மையத்தைப் பயன்படுத்தி இந்த மோசடிச் செயல்களில ஈடுபட்டுள்ளார். இவரும், இவரது கூட்டாளிகளும் சேர்ந்து ரூ. 4 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications