அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 2 இந்திய மாணவர்கள் சுட்டுக் கொலை

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் ரெட்டி, கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரண்குமார்.
இவர்கள் இருவரும் லூசியானா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களாக தங்கிப் படித்து வருகின்றனர். இருவரும் திருமணமானவர்கள். எனவே இவர்களுக்கு திருமணமான மாணவர்களுக்கான இருப்பிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு சந்திரசேகர் ரெட்டி தங்கியிருந்த அறைக்கு கிரண்குமார் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் பயந்து போன அவரது கர்ப்பிணி மனைவி சந்திரசேகர் ரெட்டியின் அறைக்குச் சென்றார்.
அங்கு கிரண்குமாரும், சந்திரசேகர் ரெட்டியும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார். இருவரும் கட்டப்பட்டு, நெற்றிப் பொட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களை யார் கொன்றனர், எதற்காக இந்தக் கொலை நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் திட்டமிட்டப் படுகொலை என்பது தெரிய வந்துள்ளது. அனேகமாக கொள்ளையர்களின் கைவரிசையாக இது இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடந்த பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத 3 பேர் சென்றதாக சிலர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications