தமிழ் எம்.பியின் பதவி பறிப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை தமிழ் எம்.பி. ஈழவேந்தனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பின் போது அவர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

இலங்கை தமிழ் எம்.பிக்கள் அமைத்துள்ள தமிழ் தேசிய கூட்டணியில் இடம் பெற்றிருப்பவர் ஈழவேந்தன். இவர் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நாடு திரும்பிய அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார். ஆனால் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களிக்க அவருக்கு அனுமதி தரப்படவில்லை.

3 மாதங்களுக்கும் மேலாக நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நடந்த வாக்கெடுப்பின்போது ஈழவேந்தனை நாடாளுமன்றத்திலிருந்து அவைக் காவலர்கள் வெளியேற்றி அனுப்பி விட்டனர்.

தான் வெளிநாடு போவது குறித்து சபாநாயகரிடமும் முன் கூட்டியே தெரிவித்து விடுப்பு எடுத்து விட்டுத்தான் சென்றதாக ஈழவேந்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் 3 மாத காலத்திற்கும் மேலாக அவர் தங்கியதால் உறுப்பினர் பதவியை பறித்துள்ளதாக சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+