சென்னையில் நாளை வைகோ போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ. 1000 வழங்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நாளை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டால் (100 கிலோ) ஒன்றுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும், தமிழகத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி நடைபெறும் மின்தடை மற்றும் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாளை (17ம் தேதி) சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாடமட் நடத்தப்படும்.
போராட்டத்திற்கு பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்குவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications