அவசரநிலையை திரும்பப் பெற்றார் முஷாரப்
இஸ்லாமாபாத்: அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் தொடர் நெருக்கடியைத் தொடர்ந்து அவசர நிலையை திரும்பப் பெற்றார் அதிபர் முஷாரப். மேலும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்து வந்த நிலையில் நவம்பர் 3ம் தேதி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் அதிபர் முஷாரப். மேலும் அரசியலமைப்புச் சட்டமும் முடக்கி வைக்கப்பட்டது.
நீதிபதிகள், வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் என பலரும் சரமாரியாக கைது செய்யப்பட்டனர். முஷாரப்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காமன்வெல்த் அமைப்பும், பாகிஸ்தானை தனது கூட்டமைப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்தது.
முஷாரப் ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக வேண்டும், அவசர நிலையை ரத்து செய்ய வேண்டும், அரசியலமைப்புச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் சமீபத்தில் ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகினார் முஷாரப். இதைத் தொடர்ந்து நேற்று அவசர நிலையை விலக்கி உத்தரவிட்டார். அரசிலமைப்புச் சட்டமும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜனவரி 8ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications