சட்டீஸ்கர் சிறையிலிருந்து 300 கைதிகள் தப்பி ஓட்டம்
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாலா என்ற ஊரில் உள்ள சிறையிலிருந்து 110 மாவோ நக்சலைட்டுகள் உள்ளிட்ட 300 கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் சட்டீஸ்கரில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
தாண்டேவாலா சிறையில் ஏராளமான மாவோ நக்சலைட்டுகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை 5 மணியளவில் இந்த சிறையிலிருந்து 110 மாவோ தீவிரவாதிகள் உள்ளிட்ட 300 பேர் துணிகரமாக தப்பினர்.
கைதிகள் தப்பிச் செல்ல முயன்றபோது அதைத் தடுக்க முயன்ற 2 விசாரணைக் கைதிகள் மற்றும் 3 பாதுகாவலர்களை தப்பிச் சென்ற கைதிகள் சரமாரியாக தாக்கியதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.
முதலில் சுஜித் குமார் என்ற நக்சலைட்தான் தப்பினார். அவர் பாதுகாவலர் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்தார். பின்னர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபடி மற்ற கைதிகள் தப்ப உதவினார்.
இந்த சிறையில் மொத்தம் 377 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை அமைந்துள்ள குதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் என்பதால் சிறைக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி முக்கால்வாசி கைதிகள் தப்பிச் சென்றது, சட்டீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதிகள் தப்பிச் செல்லும்போது ஆறு துப்பாக்கிள், ஒரு வயர்லஸ் செட் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க தீவிர வேட்டை நடந்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications