கிராமங்களில் மருத்துவ வசதி இல்லை-பாமக
சென்னை: தமிழகத்தில் பல கிராமங்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவேயில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ வசதியில்லாத கிராமங்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும். செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அனைத்து சுகாதார மையங்களிலும் மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இன்று சென்னையில் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் ஏழைகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை. நமது மாநிலத்தில் மொத்த அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 9,349 மட்டுமே. இதன்படி பார்த்தால் நமது மாநிலத்தில் 6,500 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலை உள்ளது.
கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முறைப்படி செயல்படவில்லை. பல கிராமங்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.
இதை கருத்தில் கொண்டு டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சிறப்பு மருத்துவர்கள் வேண்டும். ஏழைகளும் இதய சிகிச்சை உடனடியாக பெறும் வசதி வேண்டும்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும் என்றார் ஜி.கே.மணி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications