நெல்லை திமுக மாநாட்டுக்காக கிராமங்களுக்கு மின்வெட்டு - வைகோ
சென்னை: நெல்லையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காக கிராமப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மின்தடை, உரத்தட்டுப்பாடு மற்றும் விவசாயிகளுக்கு நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ. 1,000 வழங்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதிமுக சார்பில் வைகோ தலைமையில் இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் வைகோ கூறியதாவது,
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். நெல்லை திமுக மாநாட்டுக்கு தடை இல்லாத மின்சாரம் கிடைப்பதற்காக கிராமப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்ல. கடுமையான உரத் தட்டுப்பாடு காரணமாக ஏழை விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000ஆக உயர்த்தாவிட்டால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாவார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக குவிண்டால் 1க்கு ரூ.1,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மாநில அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஆற்காடு வீராசாமியும், டாக்டர் ராமதாசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள். மத்திய, மாநில அரசியலில் விரைவில் மாற்றம் வரும் என்றார் வைகோ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications