மலேசியாவில் கால் பதிக்கும் அண்ணா, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகங்கள்

கோலாலம்பூர்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் மலேசியாவில் புதிய சர்வதேச தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை அமைக்கவுள்ளன.
மலேசியாவின் 2வது பெரிய மாகாணமான பெராக் மாகாணத்தில் ரூ. 5400 மில்லியன் மதிப்பில் இந்த பிரமாண்ட பல்கலைக்கழகம் உருவாகிறது.
இந்த புதிய சர்வதேச பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பல் மருத்துவம், பார்மசி, நர்சிங், தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாஜலி, ஜியோ சயின்ஸ், நிர்வாகவியல் படிப்புகள் சொல்லிக் கொடுக்கப்படும்.
குவா டெம்புராங் என்ற நகரில் அமையவுள்ள இந்த சர்வதேச பல்கலைக்கழகத்தை பிளேர் கல்வி சேவை நிறுவனம் அமைக்கிறது. இந்த கூட்டு முயற்சியில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கழகம், கர்நாடக மாநிலம் பெல்காமில் உள்ள கே.எல்.இ. பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த முயற்சியில் ஈடுபடுகின்றன.
மான்சரோவர் குழும நிறுவனத்தின் ஒரு உப நிறுவனம்தான் பிளேர் கல்வி சேவை நிறுவனம். இந்த நிறுவனம் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளையும், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களையும் நிறுவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சென்னை வந்த பெராக் மாகாண முதல்வர் டஜோல் ரோஸ்லி கஸாலி இதுகுறித்த விவரங்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், இந்தத் திட்டத்திற்காக பெராக் மாகாண அரசு 100 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. கட்டுமானப் பணிகள் 2009ம் ஆண்டு நிறைவடையும் என்றார்.
மேலும், கஸாலியின் வருகையின்போது இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்புக்கும், பிளேர் கல்வி சேவை நிறுவனத்திற்கும் இடையே, இந்த புதிய சர்வதேச தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
புதிய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் வி.ஜி.குமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications