வாக்கிங் போன நாட்டாண்மை வெட்டிக் கொலை
திருநெல்வேலி: நெல்லை அருகே சுரண்டையில் அருகே காலையில் வாக்கிங் சென்ற ஊர் நாட்டாண்மையை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
நெல்லை மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள குருங்காவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (58). இவருடைய மனைவி இசக்கியம்மாள் (53). இவர்களுக்கு குழந்தை கிடையாது.
பணத்தை வட்டிக்கு விட்டு தொழில் செய்து வந்த பெரியசாமி அந்த ஊர் நாட்டாண்மையாகவும், அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றின்
தர்மகர்த்தாகவும் இருந்துள்ளார்.
குருங்காவனத்திலிருந்து தினமும் காலையில் பெரியசாமி வாக்கிங் வருவார். வழக்கம் போல் வாக்கிங் வந்து கொண்டிருக்கும் போது சுரண்டை அருகே பைக்குகளில் வந்த 5க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் அவரை வழிமறித்தது. உடனே பெரியசாமி ஓடினார். ஆனால் அவரை விரட்டி
சென்ற கொலைகார கும்பல் கழுத்தை துண்டாக்கி வெட்டி படுகொலை செய்தது விட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் பெரியசாமி ரத்தவெள்ளத்தில் பிணமானார்.
பட்டபகலில் நடந்த படுகொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால் தான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
குருங்காவனம் ஊர் நாட்டாண்மை படுகொலை செய்யப்பட்டது அறிந்த அந்த கிராமத்து மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications